கும்பகோணம், ஜன. 12 –
கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
கும்பகோணத்தில் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாவான தைப்பொங்கல் விழா நாளை மறுநாள் எதிர்வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாக்கள் களை கட்டி உள்ளது.
இந்நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சாதி, மதங்களை கடந்து ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இந்தசமத்துவ பொங்கல் விழா சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் நகர செயலாளர் தமிழழகன் ஒன்றிய செயலாளர் கணேசன் மாவட்ட பிரதிநிதி கரிகாலன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் ஒன்றுகூடி வண்ணக் கோலமிட்டு குத்துவிளக்கு ஏற்றி, பானையில் பால் பொங்கி வரும் நேரத்தில் பொங்கலோ பொங்கல் என்று பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிட்டு அனைவருக்கும் பொங்கல் அளித்து மகிழ்ந்தனா். தொடர்ந்து 52 விவசாயிகளுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு வேளாண் பயிர்க் கடன்களை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வழங்கினார்.