திருவண்ணாமலை டிச.27-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகருக்கு இன்று வருகை தரும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. போளூர் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளூரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ராஜேந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.சேகரன், மாவட்ட கண்காணிப்புகுழு உறுப்பினர் கே.வி.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க போளூர் நகர செயலாளர் கோ.தனசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் போளூர் நகருக்கு இன்று 27ந் தேதி (திங்கள்கிழமை) அரசு கட்டிடங்களை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் நா.பாண்டுரங்கன், போளூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பெ.சாந்திபெருமாள், இ.இந்திரா இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் கோ.சண்முகம், ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், நகர செயலாளர்கள் கே.டி.ஆர்.பழனி, ரா.முருகன், அரசு வழக்கறிஞர்கள் தே.பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்.நரேஷ்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் என்.கே.பாபு, பிசிஎம்எஸ் தலைவர் ஏ.சரவணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் வா.சுந்தர் நன்றி கூறினார்.




















