கும்பகோணம், டிச. 26 –

தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தினால் நடைபெற்ற 1000 கோடி பணமோசடிக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்போடு காணப்படுகிறது நகரம்..

தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராகத் என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் பேருந்து நிறுவனத்தை கமாலுதீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இவர் தங்களிடம் பங்குதாரராக ஒரு லட்ச ரூபாய் முதலீடு செலுத்தினால்,  மாதந் தோறும் 2000 ரூபாய் தருவதாக கூற ஏராளமானோர் அவரிடம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கமாலுதீன் இறந்து விட்ட நிலையில், இந்நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்கள், அவரது உறவினர்களிடம் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காததால் தங்களுக்கு முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிய வருகிறது.

இந்நிலையில் கும்பகோணம் நகரில் பல்வேறு இடங்களில் ராகத் டிராவல்ஸ் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த நபர்களுக்கு  தமிழக அரசு உரிய நீதி வழங்க வேண்டும் என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் நகரமே பரபரப்போடு இருக்கிறது. இந்த சுவரொட்டியில் ராஹத் குழுமத்தில் முதலீடு செய்து வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்கள்  என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here