காஞ்சிபுரம், டிச. 25 –
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பட்டா என்ற கிராமத்தில் உள்ள தனியார் (R.S மைன்ஸ்) கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து திடீரென விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அதேப் பகுதியை சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கினார்கள். அதில் எம்ரூஸ் என்பவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். அவருடன் இருந்த நந்தகுமார் உயிருக்கு ஆபாத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துக் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த எம்ரூஸ் ( 48 )உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நந்தகுமார் 52 சிகிச்சைக்காக செங்கல்பட்டு அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நந்தகுமார் உடல் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவித்தனர். விபத்து குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டு இரண்டு வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பத்து நாட்களுக்கு முன்பு தான் இந்த கல்குவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் கல்குவாரி இயக்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் நேரடியாக வருவாய்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்புதான் விபத்துக்கான முழுவிவரம் தெரிய வரும்.




















