கும்பகோணத்தில் கணித மேதை இராமானுஜர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கும்பகோணம், டிச. 22 –

கும்பகோணத்தில் இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சரங்கபணி கோவில் சன்னதி தெருவில் உள்ள ராமானுஜர் இல்லத்தில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் ராமானுஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் 1914ஆம் ஆண்டுக்கும், 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டு பிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்தவர். என்று  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் ஒன்றியம் துணை பெருந்தலைவர் கோ.க. அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here