திண்டுக்கல், டிச- 21
தம்பட்டம் நாளேட்டின் எதிரொலிச் செய்தி …
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததும் கடந்த கால ஆட்சியில் கவனிக்கப்படாது இருந்த இம்மருத்துவமனையின் அவலநிலையை அப்பகுதி பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அரசு மற்றும் துறைச்சார்ந்த உயர் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்றதின் விளைவாக தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஆறே மாதமான நிலையில் பல்வேறு இயற்கை பேரீடர்களின் ஆபத்துகளில் இருந்து தமிழக மக்களை காத்திடும் பொறுப்பில் ஈடுப்பட்டு பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் திரு .மு.க.ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் கடைக்கோடியில் எழுந்த பிரச்சினையையும் கனிவோடு கவனித்து இப்பகுதியில் வாழும் எண்ணற்றோர் நெஞ்சங்களை கவரும் வகையில் கால்நடை மருத்துவ மனையில் கடந்த ஆட்சியாளர்களின் கவனிப்பற்ற குறைபாட்டை தீர்த்திடும் வகையில் இம்மருத்துவமனைக்கு மருத்துவரை நியமித்து உடனடித் தீர்வு தந்த தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றிகளை உள்ளார்ந்த அன்போடு அவரின் செயல்பாட்டுக்கு அர்பணிக்கிறார்கள்.
ஆம், இனி பண்ணைக்காடு பகுதியில் கால்நடை மருத்துவருக்கு காத்திருக்கும் நிலைமை இல்லை .. ஏனெனில் தமிழக அரசு எடுக்கப்பட்ட முயற்சியில் தினமும் காலையில் 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டு இருக்கும் அதற்கான மருத்துவர் திரு முனீஸ்வரர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் ..வாரத்திற்கு மூன்று நாட்கள் மருத்துவ அதிகாரி வருவார்கள். வந்த நாளிலயே கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பெரும் தொண்டை அளித்திடும் மருத்துவர்
இனி இப்பகுதியில் கால்நடைகளை கவனிக்க மருத்துவர் இல்லாத கவலைத் தணிந்தது இப்பகுதி மக்களுக்கு .. கால்நடை வளர்ப்புக்கள் இனி இப்பகுதியில் வளம் பெற்று தங்கள் நலம் மட்டுமில்லாது, எங்கள் கிராமம் மற்றும் மாவட்டம் தமிழகம் என கால்நடை வளர்ப்பின் மூலம் பொருளாதாரத்தில் மேன்மை பெறும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள் சமுக ஆர்வலர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் குதுகலத்துடன் தெரிவிக்கின்றனர் .. மீண்டும் ஒருமுறை மாவட்டம், துறைச்சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு கை கூப்பி நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் அவர்கள் …