கும்பகோணம், டிச. 9 –
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் உள்ள, படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் அமைந்துள்ள படித்தாண்டா பரமேஸ்வரி திருக்கோயில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னை ஆதிபராசக்தியானவள் அகில புவணங்களையும் படைத்து காத்து ரக்ஷப்பதற்காக எண்ணிலா நாமரூபங்கள் கொண்டு அருளாட்க்ஷி செய்து வருகின்றாள்
உலக உயிர்களுக்கெல்லாம், இச்சா சக்தி, ஞான சக்தி, மற்றும் கிரியா சக்தி ரூபமாகவும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், தலைவியாக விளங்கும் இத்தலத்தில் ஸ்ரீ மங்கள விநாயகர் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் ஸ்ரீ பவளக்கொடிஸ்வரி ஸ்ரீ கால பைரவர் ஆகிய பரிவாரங்களோடு உள்ள அன்னை ஸ்ரீ படிதாண்டா பரமேஸ்வரி ஆலயத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும், அருள்பாலிக்கிறார்.
இத்தகைய பிரசித்தி பெற்ற ஸ்தலத்தில், கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று 7ம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹ_தி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது
தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, ஷஷ்டி திதி, அவிட்ட நட்சத்திரம், தனுர் லக்னத்தில், புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.