ஆர்.கே.பேட்டை, நவ. 12 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டம் வி.புதூர் ஏரிக்கு செல்லும் சிறிய கால்வாயின் தடுப்பணை உடைந்து நீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்யும் விதமாக ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் உடைப்பு ஏற்பட்டு உள்ள இடத்திற்கு நேரில் சென்று 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.