சென்னை, அக். 27 –

நவம்பர் 6 – 2021 அன்று முற்பகலில் நடக்கவுள்ள இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான எழுத்து தேர்வு ( முதல் நிலை கொள் குறி வகை ) எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 10/2021 ஆக. 25-2021 வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு ( முதல்நிலை ) எதிர்வரும் நவம்பர் 6- 2021 முற்பகல் 5 மாவட்ட தேர்வு மையங்களில் நடைப்பெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூடம் நுழைவு சீட்டுகள் ( Hall Ticket ) தேர்வாணையத்தின் இணைய தளமான  www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in – ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் ( OTR ) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை  ( Hall Ticket )  பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வெழுத வரும் விண்ணப்பதாரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளையும் அச்செய்திக்குறிப்பில் பின் வருமாறு தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாத தாக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், எந்த ஒரு தேர்வரும் முற்பகலில் நடைப்பெறும் தேர்விற்கு 9.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ அதுப்போன்று 12.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப் படமாட்டர்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதைப் போன்று விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்துக் கொள்ளும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை கூகுல் மேப்ஸ் மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைக்குள் அலைபேசியை கொண்டு செல்ல அனுமதியில்லை எனவே விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் உள்ள குறிப்பின் படி தங்களது அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வு மையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்குமாறு  அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் சொந்த உடமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த பொறுப்புக்குட்பட்டதாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here