கும்பகோணம், அக். 22

கும்பகோணத்தில் 15 அடி பள்ளத்தில் விழுந்து அலறிய பசுமாட்டை தீயணைப்பு மீட்பு படையினர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து அப்பசுவை உயிருடன் மீட்டனர்.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பனிமனை அருகில் உள்ள 15 அடி ஆழம் கொண்ட கழிவுநீர்  கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பகுதியில்  பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த போது அப்ள்ளத்தில் எதிர்பாராத விதமாக திடீரென விழுந்தது.

 

பள்ளத்தில் விழுந்த மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் தீயணைப்புத்துறை மீட்புக்குழுவினர் அந்த பகுதிக்கு வந்து 15 அடி பள்ளத்தில் விழுந்த பசுவை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.  ஆனால் மீட்கும் பணி வெகு நேரமாக தொடந்ததால் அவ் வழியை ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த காவல் ஆய்வாளர் பேபி  பொதுமக்களை உதவிக்கு அழைத்து பின்னர் பள்ளத்தில் விழுந்த மாட்டுக்கு நெஞ்சு மற்றும்  வயிற்று பகுதியில் கயிறு கட்டி மேலே இழுத்து பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

பள்ளத்தில் விழுந்த பசுமாட்டை மீட்க உதவிய பொதுமக்களுக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நன்றி தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here