கும்பகோணம், அக். 22 –

இன்று கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமையகம் முன்பு, போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் நாள் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், இது குறித்த பேச்சு வார்த்தையினை உடனடியாக துவக்க வேண்டும்,  குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும்,   என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட தலைமையகம் முன்பு,  இன்று காலை முதல் மாலை வரை தொடர் முழக்க போராட்டத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பேட்டா மற்றும் இன்சென்டிவ் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையினை வழங்கிட வேண்டும்,  ஓய்வு பெற்றோர் பண பலன், அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவக்காப்பீட்டினையும் வழங்கிட வேண்டும்.

ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், இது குறித்த பேச்சுவார்த்தைகயினை உடனடியாக துவக்க வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20 சதவீதம் பெற்று வந்த பண்டிகை கால போனஸை, கடந்த அதிமுக அரசு, கொரோனாவை காரணம் காட்டி, 10 சதவீதமாக குறைத்தது, எனவே குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here