கும்பகோணத்தில் கோயில் நிலங்களில் உள்ள பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக 79 பி புதிய சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. அதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக்.21 –
கும்பகோணத்தில் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தி கைது செய்து ஜாமீனில் வெளி வர முடியாத புதிய 79 பி எனும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அந்த அறநிலையத்துறை சட்டத்திருத்தத்தை உடனே திரும்பப் பெறக்கோரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் மாநில அமைப்புக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு செல்வம் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ரவீந்திரன் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மாவட்ட அமைப்பாளர் ஜீவபாரதி திருபுவனம் பக்கிரிசாமி செந்தில்குமார் திருச்சேறை ஆறுமுகம் திருநாகேஸ்வரம் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆர்ப்பாட்டத்தில் பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் 79 -பி புதிய சட்டத்திருத்தத்தை உடனே திரும்பப் பெற வேண்டும. அரசாணை 318 க்கான தடையை நீக்கிட சட்டமன்றத்தில் அறிவித்தபடி அரசின் சார்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அறநிலைத்துறை சட்டப்பிரிவு 34 ன் படி தலைமுறைகளாக உள்ளவர்களுக்கு அந்தந்த இடங்களுக்கு நியாயமான விலையை தீர்மானித்து அவர்களுக்கே பட்டா வழங்கிட வேண்டும்.
சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் ஆர்.டி.ஆர் பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்து கொராணா தொற்று காலத்தில் உள்ள வாடகையை ரத்து செய்ய வேண்டும்.
காலம் காலமாக கோயில்களுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும் கோயில் இடத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர்.