கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனத்தாள் காவல் நிலையத்தில் சேவியர் என்பவர் தனது மகளை காணவில்லை என்றுக் கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளி அடையாளம் காட்டிய இடத்தில் அப் பெண்ணின் உடலை இன்று தோண்டி எடுத்து கொலைக் குற்றவாளியை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

படம் : கார்த்திக்

கும்பகோணம், அக். 17 –

கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தை சேர்ந்த டேவிட் ஆரோக்கியசாமி என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா ( 32) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அனிதா தன் இரு பிள்ளைகளுடன் மானம்பாடி எனும் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந் நிலையில் தனது பிள்ளைகள் கம்யூட்டர் கற்றுக் கொள்வதற்காக அவர்களை திருப்பனந்தாள் எனும் ஊரில் உள்ள ஒரு ப்ரவுசிங்க் சென்டருக்கு தினசரி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அதைப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்த்திக் என்பவருக்கு ரூ. 3 லட்சம் அளவில் பணம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த அக் 12 ஆம் தேதி தனது பிள்ளைகளை கம்யூட்டர் வகுப்பிற்கு அழைத்து சென்றவர் பிள்ளைகளை அங்கையே விட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை,

 இத் தகவல் அறிந்து அனிதாவின் தந்தை சேவியர் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இது தொடர்பாக திருப்பனந்தாள் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இப் புகார் தொடர்பாக காணவில்லை என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப் பெற்று வந்த நிலையில், கம்யூட்டர் சென்டர் கார்த்திக்கிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் தான்தான் அனிதாவை கொலை செயததாகவும், அவரைக் கொலை செய்து குமரன்குடி என்ற இடத்தில் புதைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அனிதா புதைக்கப்பட்ட இடத்திற்கு  கும்பகோணம் வட்டாட்சியர் தங்க பிரபாகரன் மற்றும் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் நேரில் சென்று  சடலத்தை தோண்டி எடுத்தனர். அந்த இடத்திலேயே  அரசு மாவட்ட தலைமை  மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கார்த்திக்கின் தந்தை பொன்னுசாமி, சகோதரர் சரவணன், மனைவி சத்யா ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் இக்கொலையை எதற்காக கார்த்திக் செய்தார் என்பது குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here