காஞ்சிபுரம், செப் . 27 –

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில்  நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே கூரம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வரதனை ஆதரித்து சேலம் திமுக தலைமை கழக பேச்சாளர் கோபி குடு குடுப்புக்காரர் வேடமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திமுக ஆட்சியில் கடந்த நான்கு மாதத்தில் நடைப்பெற்று வரும் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை தேர்ந்தெடுத்தது போல் தற்போது நடைப்பெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலிலும் திமுகவை வெற்றிப் பெற செய்ய வேண்டுமெனவும், இப்பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வீடு வீடாக நேரில் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here