திருமுல்லைவாயல் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற் கொண்டனர்.
திருமுல்லைவாயில், செப். 26 –
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சத்தியநாராயணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அங்குமிங்குமாக இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்ததை கண்ட உதவி ஆய்வாளர் இருவரையும் அழைத்து சோதனை செய்ததில் அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அண்ணனூர் பகுதி ஏரிக்கரை சேர்ந்த சிவா வயது 23 என்பதும், மற்றொருவர் ஜெய் வயது 17 கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இருவர் மீதும் கஞ்சா கடத்திய வழக்கு பதிவுசெய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் இருவரையும் சிறைக் காவலுக்கு உட்படுத்தினர்.