தென் பகுதியில் உள்ள ஊர்களுக்கு பஸ் வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கும் நிலை உருவாகிவுள்ளது. அதனால் லாரி மற்றும் வேன்களில் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
செங்கல்பட்டு, செப். 9 –
செங்கல்பட்டு அருகேவுள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் பொது மக்கள் தென் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை நிலவி வருகிறது. நாளை வினாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை அதனைத் தொடர்ந்து வரும் வரும் சனி, ஞாயிறு விடுமுறைகளாலும் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இருந்து தென் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் குறைவாகவே வருவதால், லாரி, மற்றும் வேன்களில் ஏறி பயணிக்கின்றனர். இதனால் பயணிகள் சிரமத்திற்கும், ஆரோக்கியம், மற்றும் பாதுகாப்பற்ற நீண்ட தூர பயணத்தால் ஆபத்து ஏற்பட வாயப்பும் இருப்பதாக காத்திருக்கும் பயணிகள் பலர் இது பற்றி தங்களுக்குள் உள்ள அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
உடன் தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.