pic file copy

திருவள்ளூர் செப் 09 :

மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூர் பஸ் நிலையத்திலிருந்து சென்னை எம்.ஜி.ஆர் கோயம்பேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மாநகர மற்றும் தனியார் பஸ் என 300 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 

இதனால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.இந்நிலையில் அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி திருவள்ளூர் பஸ் நிலையத்தில் உள்ள இரண்டு நுழைவாயிலையும் மரக்கட்டையால் அடைத்து பஸ்கள் உள்ளே செல்லாதவாறு மூடி பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

 

இதனால் பஸ்களை சாலை ஓரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சி.வி.நாயுடு சாலை, காக்களூர் சாலை, செங்குன்றம் சாலை, தேரடி ஆகிய இடங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 

எனவே அதிகாரிகள் மாற்று பஸ் நிறுத்தம் ஏற்பாடு செய்யாவிட்டால் திருவள்ளூரில் இருந்து எந்த பஸ் எங்கே செல்கிறது என்று தெரியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here