pic file copy
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் திருவண்ணாமலை கால்நடை மற்றும் பராமரிப்பு துறை துணை இயக்குனர். மருத்துவர் என். பாரதி முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமில் 21 பசுக்களுக்கு இலவச செயற்கை முறை கருவூட்டல், 52 பசு கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், 74 கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 12 சினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பில் பசு மற்றும் எருமைகளுக்கு இலவசமாக செயற்கை முறை கருவூட்டல் செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண் கொண்டு வரவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இம்முகாமில் அம்மாபாளையம் கால்நடை மருத்துவர் நித்யா மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் சிகிச்சை பணி மேற்கொண்டனர்.
மேலும் விவசாயிகள் பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது முகாமில் விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.