வினாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் பண்டிகைகளை நம்பி வாழும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம் என்று தங்கள் வாழ்விற்கு வழி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம். செப். 6 –

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஆளுயுர சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிப்படவும் நீர்நிலைகளில் கரைத்திடவும் அரசு தடைவிதித்துவுள்ளதால் அதை நம்பி வாழும் எங்கள்  வருவாய் பாதிக்கப் பட்டு,வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம் என்று தொழிலாளர்கள்  தங்கள் மனுவில்  தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள்  மாவட்ட துணை தலைவர் E V இஷ்டலிங்கம் தலைமையில் கோரானா நோய்தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லா வர்த்தக தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேப் போல் கல்விக்கூடங்களும், சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை என எல்லாம் மக்கள் கூடும் இடங்களில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை மட்டும் பொது இடங்களில் சிலைகளை வைத்துக் கொண்டாட தடை விதித்திருப்பது எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடங்கிய நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வருமானத்தை வைத்துதான் தினந்தோறும் உணவு செலவு முதல் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுப்பது, பிள்ளைகளின் கல்வி செலவு, திருமண செலவு போன்ற அனைத்தையும் சமாளிக்க வேண்டும் எனவே விநாயகர் சதுர்த்தி விழா நடக்காததால் வருமானமின்றி வாழும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொம்மை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு  பயன் படும் வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண் விநாயகர் சிலைகள் செய்து விற்கவும், வீட்டில் செய்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை விற்க தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் செய்து வைத்துள்ள சிலைகள் மழையால் சேதம் அடைந்து மீண்டும் பயன் படுத்த முடியாத அளவிற்கு போய்விட்டன அதற்கான நஷ்ட ஈடாக உதவித்தொகை வழங்குவதோடு மீதமுள்ள சிலைகளை பாதுகாத்து வைத்து வரும் நாட்களில் பயன்படுத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானம் இல்லாததால் வங்கியில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியவில்லை ஆகையால் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். குறைந்தபட்சம் இந்த இரண்டு ஆண்டுகளுக்கான வட்டித் தொகையாவது அரசு தள்ளுபடி செய்யுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இவற்றை வலியுறுத்தி காகிதகூழ் பொம்மை தயாரிப்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here