திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ பயிலும் மாணவனுக்கு கொராணா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 130 மாணவ, மாணவிகளுக்கும் ,27 ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் எனும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவிடைமருதூர், செப். 6-
திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் தமிழக அரசின் உத்தரவையடுத்து கடந்த வாரம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சளி, மற்றும் காய்ச்சல் அறி குறி உள்ள மாணவ, மாணவியர்களுக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டது. இதில் +2 பயிலும் மாணவன் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானது
அதனை எடுத்து இன்று அந்தப் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது அப்பகுதியை திருவிடைமருதூர் வட்டாட்சியர் சந்தான வேலு பார்வையிட்டார்
இதனைத் தொடர்ந்து இன்று அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 130 மாணவ, மாணவியர்களுக்கும், இப்பள்ளியில் ஆசிரியர், ஆசிரியைகளாக பணியாற்றும் 27 நபர்களுக்கும் இன்று ஆர்டி-பிசிஆர் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.