திமுக கூட்டணி பலத்தாலும் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி அவர்களைக் கவர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது. அக்கட்சிக்கு சுயபலம் என்பது எப்போதும் கிடையாது என திமுகவை விமர்சனம் செய்தார்.
காஞ்சிபுரம், செப். 4 –
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள மணி மண்டபத்தில் சங்கராச்சாரியாரை சந்திப்பதற்காக செல்லூர் ராஜு குடும்பத்துடன் வந்திருந்தார் சங்கராச்சாரியாரை சந்தித்து விட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் திமுகவை விமர்சனம் செய்துப் பேட்டியளித்தார் அவர் கூறியதாவது
திமுக கூட்டணி பலத்தால் மட்டுமே ஆட்சிக்கு வந்துள்ளது எப்பொழுதுமே திமுக சுய பலத்தாலும் நல்ல திட்டங்களாலும் ஆட்சிக்கு வந்தது கிடையாது திமுக தற்போது ஆட்சி அமைத்து இருக்கிறது. விடியல் தருகிறேன் என்றார்கள் ஆனால் அணில் தான் வந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் அணில்தான் அடிக்கடி வந்து விளையாடுகிறது என்றார்.