சென்னை, ஆக. 15 –
75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பாஜக சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற 75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச் சாவடியில் பாஜக சார்பில் 75 பேர் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பாஜக இளைஞர் அணி சார்பில் மாபெரும் சைக்கிள் பேரணியை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து அண்ணாமலை சைக்கிள் பேரணியில் சென்றார்.அவர்கள் அனைவரும், தேசிய கொடியை ஏந்தியவாறு உத்தண்டி சுங்கச் சாவடியில் இருந்து துவங்கி மாமல்லபுரம் வரை சென்றடைந்தனர். முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக் கன்றுகள் நடும் விழாவும் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம், செங்கல்பட்டு மாவட்ட பார்வையாளர் வேதா சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.