திருவள்ளூர், ஆக. 15 –
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடி ஏற்றி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஏற்றி வைத்து மூவர்ண நிற பலூனை வானில் பறக்கவிட்டும், சமாதானப் புறாக்களை பறக்க விட்டும் காவல் துறையினரின் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு 28 பயனாளிகளுக்கு 7 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்தி 312 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கொரோனாவில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறையைச் சேர்ந்த 63 பேருக்கு பாராட்டு நற் சான்றிதழ்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சுகாதார ஆய்வு பணியில் சிறப்பாக பணியாற்றிய திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.ஆல்பர்ட் அருள்ராஜி அவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வி.வருண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, உடன் இருந்தனர். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 40 அலுவலர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.