திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுகா, சோழாவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரனோடை ஊராட்சிப் பகுதியை சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்களின் உடலை கொசஸ்தலை ஆற்றில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக நள்ளிரவில் மீட்டெடுத்தனர். அது அப்பகுதியில் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி ஆக 7 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்டது காரனோடை ஊராட்சி, இந்த ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் கண்னியலால் இவரது மகன் அர்ஜுன் (வயது 14) அதே பகு தியை சேர்ந்தவர்கள் சேகர், இவரது மகன் சத்யநாராயணன் (வயது 15) மற்றும் சாய்நாத் உல்லா இவரது மகன் ரஹமத்துல்லா (வயது15) இவர்கள் மூன்று பேரும் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
இதனையடுத்து இவர்களது பெற்றோர்கள் இரவு 6 மணிக்கு மேல் தேட தொடங்கிவுள்ளனர். எங்கு தேடியும் அவர்களைப் பற்றிய தகவல்கள் தெரியாத நிலையில், இதுக் குறித்த தகவல் கிடைத்து, காரனோடை ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா ராமச்சந்திரன், துணைத்தலைவர் முருகன் ஆகியோரின் தலைமையில் ஊர் மக்கள் காணமல் போன மூவரையும், பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் ஜனப்பன் சத்திரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இவர்களது ஆடைகள் கரையின் மீது கிடந்தது தெரிய வந்தது.
ஆடைகள் மட்டும் கரையில் இருப்பதும், அவர்கள் வெகு நேரமாகியும் கரைத்திரும்பாததால், அதிர்ச்சியும் சந்தேகமும் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர், செங்குன்றம் மற்றும் அம்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர் ஜெயச்சந்திரன் தலைமையில் வீரர்கள் வந்து நள்ளி ரவில் கொசஸ்தலை ஆற்றில் சிறுவர்களை தேடினர். சுமார் இரவு 12 மணியளவில் சிறுவர்கள் உடல்களை தீ அனைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் உடல் கூறுப் பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் இறந்து போன சம்பவம் அந்த பகுதியையே பெரும் சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது..