திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஒன்றியத்தில் நேற்று (29.07.2021) பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.

திருவண்ணாமலை, ஜூலை 30-

இவ்ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு. பிரதாப் பேருராட்சி உதவி இயக்குநர். இளங்கோவன், செயல் அலுவலர். ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,. மோகனசுந்தரம், ஒன்றிய குழுத் தலைவர் அ. ராணி அர்ஜுனன், வட்டார மருத்துவ அலுவலர் மரு. மணிகண்ட பிரபு, மருத்துவர்கள் மரு. விக்னேஷ் மரு. கோமதி மற்றும் அரசு அலவலர்கள் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மோரக்கன்னியனூரில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டம் 2020 – 2021 கீழ் 1 கி.மீ தூரம் ரூ 49.02 இலட்சம் மதிப்பிட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருதை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேற்று நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டர். மேலும் துளசிராமன் குளத்தில் ரூ25 இலட்சம் தடுப்பு சுவர் மற்றும் கருங்கல் அமைக்கும் பணியினை (65மீஒ62மீ) ஆய்வு மேற்கொண்டர். சேத்துபட் சிறப்புநிலை பேரூராட்சியில் சதிஷ் குமார் என்பவருக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் 2020 – 2021 கீழ் ரூ 2.10 மதிப்பிட்டில் கட்டப்பணி நடைபெற்று வருதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார்.  சேத்துபட் வட்டாசியர் அலுவலக வளாத்தில் மற்றும் மொடையூர் சுஊஆ தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிநடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். நேற்று நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 18 முதல் 45 வயது உள்ள ஆண் 85 நபர்களும், பெண்கள் 48 நபர்களும், 45 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் 38 நபர்களும், பெண்கள் 35 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சேத்துபட் வட்டாசியர் அலுவலகத்தின் அருகே உள்ள வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் நேரில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அவசியத்தை குறித்து அறிவுறித்தினார். சேத்துபட் ஒன்றியம் இடையான்குளத்தூர் கிரமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்பு திட்டத்தின் கீழ் ரூ 2.27 இலட்சம் மதிப்பில் கட்டிய ஆட்டு கொட்டாயினை ஆய்வு செய்தார், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்பு திட்டத்தின் கீழ் ரூ. 10.13 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அகங்கன்வாடி மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.  சேத்துபட் ஒன்றியம், தச்சாம்பாடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்பு திட்டத்தின் கீழ் ரூ. 1.07 இலட்சம் மதிப்பில் பசுமை கிராம ஊரட்சி மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நட்டு  பணியினை துவக்கி வைத்தார்.  மேலும் மொடையூர் கிராமத்தில் கருங்கல் கொண்டு செய்ப்படும் சிற்பங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here