செவ்வாய்பேட்டை, ஜூலை,21-

கிளாம்பாக்கம் நேதாஜி தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் விக்னேஷ் வயது 24, இவர் திருவள்ளூரில் மருந்துக் கடையில் பணி புரிந்து வருகிறார். சம்பவ தினமான நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில்  இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் குளம் சர்ச் அருகே சென்று கொண்டிருக்கும் போது, திருவள்ளூர் நோக்கி அதி வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் எதிரே வந்த ஈச்சர் வாகனம் பக்கவாட்டில் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்திலயே அந்த இளைஞர் இறந்துவிட தகவல் அறிந்த அவரது தந்தை செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில் இந்த விபத்து புகார் அளித்துள்ளார் . அதில் தனது மகன் இறப்புக்கு காரணமான வேன் ஒட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது மகன் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் உள்ளது அவனின் உடலை உடல் கூறு பலரிசோதனை செய்து தன்னிடம் வழங்கிட வேண்டியும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here