இராமநாதபுரம்; நவ. 20-
நடைப்பெற்று வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தனது தொகுதியில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இன்று மக்களவையில் உரையாற்றினார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகாலில் துறைமுகப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த துறைமுகப் பணிக்கு கடல் மண்ணை கொண்டு கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றது. கடல் மண்ணை கொண்டு கட்டப்பட்டால், அது விரைவில் தனது உறுதி தன்மையை இழந்து, இடிந்து விழுந்து விடும் என்று மீனவர்கள் அச்சப்படுகிறார்கள்.
மேலும், ஏற்கனவே ராமேஸ்வரம் மற்றும் மூக்கையூரில் கட்டப்பட்ட துறைமுகங்கள் பயன் பாட்டிற்கு வரவில்லை.அதன் பணிகள் முழுமையாக நடைபெறாததால் மீனவர்கள் பயன்படுத்த இயலவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின்சார பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கே கடலுக்கு நடுவே பாலம் கட்டுவதால் மீனவர்கள் தங்களின் படகுகள் செல்ல முடியாது என்றும், அனல் மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படும். கழிவுநீர் சூடான தண்ணீர் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்றும் மீனவர்கள் அச்சம் கொள்கின்றனர். எனவே அரசு உடனடியாக இதில் பாதிப்பில்லை என்றால் அது குறித்த விளக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் அங்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இத்திட்டத்தில் ஏதேனும் பாதிப்பு இருக்கும் என்றால் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே அங்கு முழுமையாக நில ஆர்ஜிதம் செய்யாததால், விவசாயிகள் அங்கு தடை உத்தரவு வாங்கி இருக்கின்றார்கள். நில ஆர்ஜிதம் செய்ய கூடாது என்று. அங்கே முழுமையாக நில ஆர்ஜிதம் செய்யவில்லை என்று சொன்னால் அத்திட்டம் நடைபெறாது. மின் உற்பத்தி செய்ய இயலாது. நில ஆர்ஜிதம் முழுமையாக செய்யப்படாத நிலையில் அங்கே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது. கோடிக்கணக்கான நிதி வீணாகி விடுமோ என்ற அச்சம் எழுகிறது. மக்கள் அச்சம் கொள்கின்றார்கள் அங்கே இருக்கக்கூடிய மீனவர்களின் அச்சத்தை போக்க கூடிய வகையில் அதனை தெளிவுபடுத்த வேண்டும் அப்படி இல்லை என்றால் அத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தார்.