இராமநாதபுரம்; நவ.11-
இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம், கடந்த 3 ஆண்டுகளாக ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாறுதல் செய்யக்கோரி, தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
இன்று மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் காலை 8:00 மணிக்கு இப்போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.பழனிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கே.எம்.தமீம் ராஜா, மாவட்ட இணை செயலர் ஆர்.காசிநாததுரை, மாவட்ட பொருளாளர் ஹரி சதீஷ் குமார் முன்னிலை வகித்தனர்.
இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை தாலுகா வருவாய் துறையினர் பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.