ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அதிக அளவில் வந்ததை வைத்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆவடி மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு பகுதிகளில் ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜாபர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கோவர்த்தன கிரியில் அரசுக்கு சொந்தமான நிலங்களிலும் தனியாருக்கு சொந்தமான காலி நிலங்களிலும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கும் பகுதிகளை ஆய்வு செய்து மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் ஒரே நாளில் ஆயிரம் ஆயில் பந்துகள் வீசப்பட்டு டெங்கு கொசுக்கள் ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வரும் நாட்களில் இன்னும் 2000 ஆயில் பந்துகள் தேங்கி நிற்கும் மழை நீரில் வீசி டெங்கு கொசு புழுக்கள் ஒழிக்கப்படும் என்று ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜாபர் தெரிவித்தார் இந்த ஆய்வில் துப்புரவு தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.