ஆவடி; அக்.13 –
ஆவடி அடுத்த பட்டாபிராமில் திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழிப்புணர்வு பாதயாத்திரை வரும் முப்பதாம் தேதி வரை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை சமூக விழிப்புணர்வு நடைப் பெற்று வருகிறது.
இதன் முதற் கட்டமாக கடந்த அக் 9 அன்று திருவள்ளூர் மாவட்ட தலைவர் லோகநாதன் கொடியசைத்து பட்டாபிராமில் இருந்து துவங்கி திருநின்றவூர் வரை சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டு 10 கி.மீ வரையிலும் சென்றனர் . செல்லும் பொழுது மதுவை தவிர்த்தல் பெண்கள் முன்னேற்றம் மரங்கள் வளர்த்தல் சமூக ஒற்றுமை மேம்படுத்தல் இயற்கை வேளாண்மை போற்றுதல் நீர் மேலாண்மையில் கவனம் கொள்ளுதல் பிளாஸ்டிக் ஒளித்து சுற்றுச் சூழல் வளப் படுத்துதல் சுதேசி போற்றுதல் கதராடை ஊக்குவித்தல் போன்ற சமூக விழிப்புணர்வு கோஷங்களை முழக்கமிட்டுச் சென்றனர். இந்த யாத்திரையில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் வடிவேல் ஆவடி நகர தலைவர் நரேந்திரன் ஆவடி நகர துணைத் தலைவர் சந்தானம் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஆவடி நிருபர் ராஜன்: