ஒசூர் பஸ் நிலையம் எதிரே அமந்துள்ள பூ மார்கெட் அருகே கழிவு நீர் தேங்கி குட்டையாக காட்சி அளித்து வருகிறது. அது தற்போது கொசுக்கள்   உற்பத்தி செய்யும் நிலையமாக மாறி வருகிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவுமோ என்ற அச்சத்துடன் கடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த துர்நாற்றம் மற்றும் கொசு கடிகளுடன் அவதி படும் நிலை நிலவி வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கன்றனர். அத்துடன் பொதுமக்களின் அவலம் போக்க உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக எடுப்பார்களா என்ற வினாவையும் எழுப்ப மறக்க வில்லை. தூய்மை இந்தியா திட்டம் இங்கு தூங்குகிறதா என்றும் வேதனை கூடிய நகைச்சுவை ததும்ப நையாண்டிக்கும் அவர்களிடம் பஞ்சமில்லை .. திட்டம் திடமாக அரசு அறிவித்தாலும் செயலாக்கம் அதிகாரிகள் கையில்தானே அவர்கள் அலட்சியப் போக்கு மாறும் வரை மக்கள் அல்லல் அகலப் போவதில்லை என்ற சலிப்பும் அவர்களிடம் தென்படாமல் இல்லை ..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here