திருவள்ளூர்: செப், 13 – திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் பகுதியில் வி.கே.என் ரயில்வே மேற் கூரை தயாரிக்கும் புதிய  தொழிற்சாலை துவக்கவிழா நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  

திருவள்ளூர் மாவட்டத்தில் கீழானூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரயில்வே மேல் கூரை தயார் செய்யும் தொழிற்சாலையை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியால் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன்

ஆவடியில் அமைந்துள்ள கனரக வாகன தொழிற் சாலை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கைமாற்றம் செய்யப் படுவதை தடுக்க தமிழக முதலமைச்சர் வேண்டிய நடவடிக்கைகளை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறார். என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். செய்தியாளர்கள் வங்கிகளை இணைப்பது குறித்து கேட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்த அவர் நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும் இதன் மூலம் விளைந்துள்ள நன்மைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும்  திருவள்ளூர் மாவட்டத்தில் புதுப்புது தொழிற்சாலைகள் வருவதற்கான ஆரம்பமே  இந்த தொழிற்சாலை திறப்பு விழா என்றும் மேலும் பல முதலீடுகளை இங்கே ஏற்படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விரைவில் பாலிமர் பூங்கா உள்ளிட்ட புதிய தொழில் பூங்காக்கள் உருவாகும் என தெரிவித்தார்.

 

 

 

 

திருவள்ளூர் செய்தியாளர் நவீன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here