ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் ஆர்.கே.ஆயுர்தம் இயற்கை வைத்தியசாலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து இயற்கை மருத்துவம், வர்ம மருத்துவம், கண் சிகிச்சை இலவச முகாம் நடத்தினர்.
ராமநாதபுரத்தில் முதன் முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆர்.கே. ஆயர்தம் இயற்கை வைத்தியசாலையில் ரோட்டரி கிளப் மற்றும் ஆயுர்தாம் இயற்கை மருத்துவம் இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர்.
இம்முகாமில் ராமநாதபுரம் ரோட்டரி கிளப் கோரல் சிட்டி தலைவர் அருணகிரி தலைமை வகித்தார். ஆடிட்டர் லோகநாதன், வாயாந்தரவை முக்கிய பிரமுகர் பி.டி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி உதவி கவர்னர் சோ.பா.ரெங்கநாதன் மருத்துவ முகாமை துவக்கிவைத்தார். டாக்டர் காளிமுத்து, டாக்டர் தேவி ராஜலெட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இம்முகாமில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஞாபக சக்தி குறைபாடு, கண் சம்பந்தப்பட்ட சிகிச்சை, வர்ம சிகிச்சை வழங்கப்பட்டது. முகாமில் 150க்கும் மேற்பட்டோர் இலவசமாக சிகச்சை பெற்றுச்சென்றனர். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இயற்கை முறையிலான உணவு வகைகள் வழங்கப்பட்டன. மூலிகை கலந்த பருத்திப்பால், சுக்கு காபி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. ரோட்டரி கிளப் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார். மாவட்டத்தில் முதன்முறையாக மூலிகை குளியல், தைலக்குளியல், இலை குளியல், எண்ணெய் குளியல், நீராவி குளியல், போன்றவை ஒரே இடத்தில் ஆண் பெண்களுக்கு தனிதனியாக உள்ளதை பார்த்து பலரும் மூலிகை குளியலை மேற் கொண்டனர்.




















