தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கூடைபந்து போட்டி கடந்த 4 நாட்களாக மாநில கூடைப்பந்து போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
ஆண்கள் பிரிவு;
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும் சென்னை எம்.சி.சி அணியும் மோதின .இதில் சென்னை லயோலா கல்லூரி அணி 91: 85 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது . சென்னை எம்.சி.சி அணி இரண்டாம் இடம் பெற்றது. எஸ்ஆர்எம் அணி 83 :58 புள்ளி கணக்கில் சத்யபாமா அணியினை வென்று மூன்றாம் இடம் பெற்றது.
பெண்கள் பிரிவு;
மேலும் பெண்கள் பிரிவில் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி 80: 74 புள்ளி கணக்கில் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது .பி எஸ் ஜி ஆர் அணி 62 ;25 புள்ளி கணக்கில் எஸ்.ஆர்.எம் கல்லூரியை வீழ்த்தி மூன்றாம் இடம் பெற்றது.
பரிசுகள்;
முதலிடம் பெற்ற அணிகளுக்கு சுழற்கோபியும் ரூபாய் 25 ஆயிரமும் , இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கு கோப்பையும் ரூபாய் 20 ஆயிரமும் ,மூன்றாம் பரிசு பெற்ற அணிகளுக்கு கோப்பையுடன் ரூபாய் 16 ஆயிரம் உள்ளிட்ட பரிசுகளை தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் , எல்.எஸ்.மில்ஸ் துணை தலைவர் பிரபாகரன், தலைவர் மணிவண்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
பங்கேற்றவர்கள்;
மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ், தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவர் ராஜ் சத்யன் ,பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட கூடைப்பந்து கழக பொருளாளர் பிரபு மற்றும் கூடைப் பந்தாட்ட உறுப்பினார்கள் ஆகியோர் கலந்து கொண்டு, விளையாட்டு பற்றி சிறப்புரை யாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறுவர் களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் ,இந்து நாடார் உறவின் முறை கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .