ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலயத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கடல் மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும் கடல் விரால் மீன் குஞ்சுகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
மீனவர்களின் நலனுக்காக மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 237 கி.மீ நீளம் கடற்கரையும், 180 கடலோர மீன்வள கிராமங்களும் உள்ளன. மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக மீன்பிடி தொழில் பெரும்பான்மையான மக்களின் முக்கியத் தொழிலாளக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் ஏறத்தாழ 1.47 லட்சம் மெட்ரிக் டன் அளவில் மீன்பிடி கிடைக்கப்பெபற்றுள்ளது. இது தமிழகத்தின் மொத்த மீன்பிடியில் 20 சதவீகிதமாகும். இந்நிலையில் நமது மாவட்டத்தில் உள்ள மீனவர்ககளின் நலனுக்காக தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டடத்தின் கீழ் 60 சதவீகிதம் அரசு மானியம் மற்றும் 40 சதவீகிதம் பயனாளிகள் பங்குத்தொகையில் கடல்மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும் கடல் வீரால் மீன்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ரூ.5 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 100 மீன் வளர்ப்பு கூண்டுகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் முதற்கட்டமாக இன்றைய தினம் 20 பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இம்மீன்வளர்ப்பு கூண்டுகளில் கடல் மீன் வளர்ப்பதற்கான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மண்டபம் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலயத்தின் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 6 முதல் 8 மாத கால இடைவெளியில் ஏறத்தாழ 2.5 முதல் 2.8 டன் அளவில் கடல் விரால் மீன்களை அறுவடை செய்து சுமார் ரூ.3 லட்சம் வரையில் லபாம் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சிதத்தலைர் பேசினார்.
விழாவில் இந்திய கடலோர காவற்படை மண்டபம் கட்டளை அதிகாரி வெங்கடேசன், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி மையத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் முரளிதரன், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி ஜெயக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் , மீனவர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.