ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு ஆண்டிப் பயாடிக் ஊசி வழங்கப்பட்டதை தொடர்ந்து 30 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எதிர் விளைவுகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் உடனடியாக மாவட்ட அரசு தலமை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை வார்டில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு இன்றைய தினம் சிபோடாக்சைம் என்ற ஆண்டிப்பயாடிக் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டிபயாட்டிக் மருந்தானது சிகிச்சைக்கு வருவபர்களுக்காக வழக்கமாக வழங்கப்படும் சாதாரண மருந்தே ஆகும். இருப்பினும் இந்த ஆண்டிபயாடிக் மருந்து செலுத்தப்பட்ட 52 நபர்களில் 30 நபர்களுக்கு எதிர்வினை  ஏற்பட்டு சளி, காய்ச்சல், உடல் நடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. எதிர்வினை ஏற்பட்ட நபர்களுக்கு உடனடியாக மாற்று மருந்து வழங்கப்பட்டு தற்போது அனைவரும் பாதிப்பு ஏதும் இல்லாமல் பாதுகாகப்பாக உள்ளனர். மேலும் எதிர்வினை ஏற்பட்ட நபர்களின் உடல் நலனை தொடர்ந்து கண்காணித்திடவும், ரத்த பரிசோதனை உள்ளிட்ட தேவையான பரிசோதனகளை மேற்கொண்டு வேறேதும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து நோயாளிகளின் அச்சத்தை போக்கிடவும் மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஆன்டிபயாடிக் மருந்தானது புதிய தொகுதியாக மொத்தம் 20 ஆயிரம் ஆன்டிபயாடிக் வில்லைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் இன்றைய தினம் நான்கு வார்டுகளுக்கு தலா 100 வில்லை8கள் வீதம் 400வில்லைகள் பயன்படுத்தவற்தற்காக பிரித்து வழங்கப்பட்டுள்ளன அதில் 52 வில்லைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 30 நபர்களுக்கு எதிர்வினை ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு ஏற்பட்ட எதிர்வினைளயானது மருந்தின் காரணாக ஏற்பட்டதா அல்லது மருந்தை பயன்படுத்தும் போது நிர்வாகத்தின் காரணத்தினால் ஏற்பட்டதா என்பதை கண்டறிய தீவிர விசாரணை செய்திடவும் மருந்தினை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பித்திடவும் மருத்துவ நலப்பணிகள் இணை இக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். ஆய்வின் போது மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜவஹர்லால், முதன்மை மருத்துவர்கள் மலையரசு, கருப்பசாமி உட்பட பலர் உடனிருந்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here