மத்திய அரசின் ஊரக வளர்ச்சி சுகாதாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடை கால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணி ( SB Sl_2.0) இளையோருக்கான தூய்மை பணி அறிவித்துள்ளது. அதில் சிறப்பாக செயல் படும் குழு மற்றும் தனிநபருக்கு பரிசுகள் வழங்கப்படுவதாகவும் அறிவித்துவுள்ளது.
தேனி; ஜூலை,
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி குடிநீர் மற்றும் சுகாதாரம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடைகால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணியினை நேரு யுவகேந்திரா மன்றத்தின் கீழ் பதிவு பெற்ற இளைஞர் மன்றங்கள் நடத்தி சிறப்பாக செயல்படும் மன்றங்களுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. மேலும் தூய்மை பாரத இயக்கத்தில் சுகாதார இருப்பதன் அவசயத்தினை உணர்த்த விழிப்புணர்வு மூலம் உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், தூய்மையை பற்றிய தெரு நாடகங்கள் நடத்துதல், தூய்மை மேலா நடத்துதல், கிராமம் மற்றும் பள்ளி அளவில் , ஊர்வலம் நடத்துதல், குப்பகளை அகற்றுவதற்கு உதவிகள் செய்தால், மக்கும் – மக்காத – திடக்கழிவு மேலாண்மை பற்றி கூறுதல், கழிவு குப்பை குழி விரிவாக்கம் செய்தல், வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்கு பொது இடம் ஏற்பாடு செய்தல், பயோகேஸ் தொடங்க பஞ்சாயத்துகளுக்கு உதவுதல், தெரு சுத்தம் தொடர் சுத்தம் செய்தல், கிராமங்களில் வீடுகளுக்கு கழிப்பறை கட்ட விழிப்புணர்வு செய்தல் போன்ற தூய்மை சம்பந்தமாக நிகழ்ச்சிகளை நடத்தும் தனி நபர் மற்றும் இளைஞர் மன்றங்களுக்கு தேசிய _ மாநில _ மாவட்ட அளவில் ஆகிய தனித் தனி பிரிவில் முதல்மூன்று இடங்களுக்கு பரிசுகளை அறிவுத்தி உள்ளது.
அதன்படி இன்று நேரு யுவகேந்திரா கீழ் பதிவு பெற்ற மரிக்குண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றத்தின் சார்பாக கிராமங்கள்தோறும் தூய்மை பாரத விழிப்புணர்வு, நெகிழியின் தீமைகள் பற்றி மரிக்குண்டு மற்றும் ஒக்கரைபட்டி, பஞ்சாயத்து கிராமங்களில் தேவரா ட்டத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தி தூய்மை பாரதம்பற்றியும், நெகிழியின் தீமை பற்றியும் விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினார். மேலும் இம்மன்றத்தின் மூலம் தெருக்களை சுத்தம் செய்தால், பூமி செழித்து தூய்மையான காற்று கிடைக்க கிராமங்கள் தோறும் மரங்கள் நடுதல் மற்றும் மத்திய இளைஞர் மேம்பாட்டு துறை அறிவுறுத்தி உள்ள செயல்பாடுகளை செய்து வருகின்றனார். விழிப்புணர்வு ஏற்பாடுகளை இளையோர் மன்ற தலைவர் பரமசிவம், பிச்சை மணி , உதயராஜா, பாபு , நவீன், நவநீதான், செளந்தர பாண்டி மற்றும் வீராபான்டிய கட்டபொம்மன் இளைஞர் அணியினார் செய்திருந்தனார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனார்.