ராமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மருத்துவதுறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை குறித்து பொது மக்களிடையே பொறுப்புணர்ச்சியினை ஏற்படுத்திட உலக மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11ல் உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இன்றைய தினம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பகுதியில் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பாக உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
        மாவட்ட ஆட்சித்தலைவர் பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, மற்றும் ராமநாதபுரம் மகளிர் கல்லுாரி மாணவிகள் என நுாற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
         முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் உலக மககள் தொகை தினத்தை முன்னிட்டு சுற்றுப்புற சுகாதார மேமம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
இந் நிகழ்ச்சியில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சகாய ஸ்டீபன்ராஜ், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு டாக்டர் ரமணீஸ்வரி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here