ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நகராட்சி பகுதிகளில் சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் குப்பை மற்றும் கழிவு சேகரிப்பு பணிகளுக்காக இலகு ரக மற்றும் மின்கல இயக்க வாகனங்களின் செயல்பாட்டினை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசிியதாவது:
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களன் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் நோக்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.61.80 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நகராட்சி பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளை சேகரித்து ஏதுவாக இலகுரக வாகனம் மற்றும் பேட்டரியில் இயங்கும் மின்கல வாகனம் என 25 புதிய வாகனங்களின் செயல்பாடு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களின் குடிநீர் வினியோகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் நகராட்சி பகுதிகளில் தினந்தோறும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்தும்விதமாக நிதி ஆண்டில் 17 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. த்போதைய நிதி ஆண்டில் ரூபாய் 10 கோடி மதிப்பில் புதிய பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், நகராட்சி கமிஷனர் சுப்பையா உட்பட நகராட்சி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், துாய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.