ராமநாதபுரம் – மே.19-
வேலம்மாள் மருத்துவ மனையில் மேலும் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது, என, வேலம்மாள் கல்வி அறக் கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் பேசினார்.
ராமநாத புரத்தில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் அறிமுக விழா நடைபெற்றது. இதில் வேலம்மாள் கல்வி அறக் கட்டளை தலைவர் முத்து ராமலிங்கம் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசை ராமநாத புரத்தில் அறிமுகம் செய்துபேசியதாவது,
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ,சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சமுதாயப் பணிகள் மூலம் கல்வி சேவை மற்றும் மருத்துவ சேவைகள் முழுமையாக செயல்படுத்தப்படும். பிளஸ் டூ தேர்வில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 90 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகையாக மாவட்டத்திற்கு தலா 10 பேருக்கு வழங்கப்படும். படித்து வேலைதேடும் இளைஞர்கள் மாவட்டத்திற்கு 50 பேர் தேர்வு செய்யப்பட்டு வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசில் உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை கல்வி மட்டுமல்லாது சமுதாயப் பணிகளையும் செய்து வருகிறது. கார்கில் போர் ,குஜராத் பூகம்பம், ஒரிசா மற்றும் கஜா புயல் ,கேரளா இயற்கை பேரழிவு போன்றவற்றில் பங்கேற்று பல்வேறு உதவிகளை செய்துள்ளது .வருடந்தோறும் 20 மாணவர்களுக்கு 100 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வேண்டிய மருத்துவு உதவி செய்ய உள்ளோம். வேலம்மாள் மருத்துவமனையில் மேலும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு ஞானசம்பந்தன், கல்வி ஆலோசகர் சிபி குமரன், மடிசியா செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் வேலம்மாள் கல்விக் குழு துணைத்தலைவர் கணேஷ் நடராஜன் நன்றி கூறினார்.