திருவள்ளூர்: ஏப்,17

அரசாணை (நிலை) எண். 60, பள்ளிக் கல்வித் (எக்ஸ் 2) துறை நாள்: 01.04.2013, அரசாணை (நிலை) எண். 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் : 12.05.2014, அரசாணை (நிலை) எண். 66 பள்ளிக் கல்வி (பொநூ 2) துறை நாள் : 07.04.2017, சென்னை-06, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல் முறைகள் ந.க.எண். 843/1/019 நாள் – 27.03.2019 மற்றும் சென்னை-06 தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் ந.க.எண். 4971/எப்1/2019 நாள்-27.03.2019-ன்படி, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1)(உ)-ன் படி அனைத்து சிறுப் பாண்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்புகளில் குறைந்தப் பட்சம் 25% இட ஒதுக்கீடு 2013-14 முதல் 2018-19-ம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர்.

 

                சிறுபாண்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் (LKG)  அல்லது  (1-ம் வகுப்பு) பள்ளி வாரியாக உள்ள மொத்த இடங்கள் மற்றும் 25 விழுக்காடு இடங்கள் ஆகிய விவரங்களை Chief Education Office, District Educational Office, Samakra Shiksha Abiyan அலுவலக தகவல் பலகைகள், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்யப்படும்.

      சட்டப்பிரிவு 12(1) (சி) இன் கீழ் சேர்க்கை வழங்க, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4(1)இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் ஆகும்.

                சட்டப்பிரிவு 12(1) (சி) இன் கீழ் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில், இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

                2019-2020-ஆம் கல்வியாண்டிற்கான திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சிறு பான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 25%  இட ஒதுக்கீடு,  சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கைக்கான விண்ணப் பங்களை முதன்மைக் கல்வி அலுவலகம்/ மாவட்டக் கல்வி அலுவலகம் /வட்டாரக் கல்வி அலுவலகம் /அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங் களில், விண்ணப் பிக்கலாம் அல்லது பெற்றோர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டு மானாலும் <http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற இணைய வழியிலும் விண்ணப்பிக்கலாம்.

                அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், சார்ந்த பெற்றோர்களுக்கு ஒப்புகைச்சீட்டு (அ.ஆ.(நிலை) எண்.60 பள்ளிக் கல்வித்துறை நாள்.01.04.2013இல் உள்ள ஒப்புகைச்சீட்டுடன் தவறாது வழங்கப்பட வேண்டும். இவ் விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகிலுள்ள வட்டார வள மையங்கள் /வட்டாரக்கல்வி அலுவலர் /மாவட்டக்கல்வி அலுவலர்/ முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் கொடுத்து இணைய வழியில் பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்.

                2019-2020-ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில், இணைய வழியாக 22.04.2019 முதல் 18.05.2019 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here