ராமநாதபுரம், மார்ச்
ராமநாதபுரம் தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வெற்றி பெற செய்வதில் 3 அமைச்சர்கள் மத்தியில் போட்டி வைக்கப் பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு 10 பவுன் செயின் வழங்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்துார், திருவாடானை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சட்டசபை தொகுதியும், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சட்டசபை தொகுதியும் உள்ளன. இதனால் 3 மாவட்டங்களை உள்ளடக்கியதாக ராமநாதபுரம் லோக்சபா தொகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 3 மாவட்டங்களில் 3 தமிழக அமைச்சர்கள் உள்ளோம். இதில் எந்த சட்டசபை தொகுதி அதிக ஓட்டு பெற்று வெற்றி வாய்ப்பை உருவாக்கி தருகிறதோ அந்த மாவட்ட அமைச்சருக்கு 10 பவுன் தங்க சங்கிலி பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். இதில் ராமநாதபுரம் மண்ணின் மைந்தர் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், விருதுநகர் மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் களப்பணியில் இறங்கி உள்ளனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெற செய்ய 3 அமைச்சர்களிடையே போட்டி –...