ஹனோய்:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று சந்தித்தனர். டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வியட்நாமில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடன் கலந்துரையாடிய பின்னர், செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது டிரம்ப் கூறுகையில், ‘இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். இரு நாடுகளுக்கிடையே சமரசம் ஏற்பட்டு நிலவும் பதற்ற நிலை நிச்சயம் தணியும் என நம்புகிறேன்’ என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here