ராமநாதபுரம், செப். 7- ராமநாதபுரத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறையில் முதற் கட்டமாக 500 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர திட்ட மிட்டுள்ளோம். அதற்காக புதிய கார்ப்பரேட் நிறுவனம் தொடங்கப் பட உள்ளது என, எஸ் இன்போடெக் கார்ப்பரேட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் முகம்மது யூசப் அலி தெரிவித்தார். அவர் ராமநாதபுரத்தில் சாலை தெருவில் புதிதாக தொடங்க உள்ள எஸ். இன்போடெக் நிறுவனத்தின் தொடக்க விழா பணிகளை ஆய்வு செய்ய வந்த போது தெரிவித்ததாவது: நான் ராமநாதபுரம் மாவட்டம் அத்தியூத்து கிராமத்தை சேர்ந்தவன். தற்போது சிராஜ் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தின் எம்டியாக உள்ளேன். எங்கள் நிறுவனம் கட்டுமானம், டெக்ஸ்டைல்ஸ், ஓட்டல்ஸ், பயர் அண்ட் சேப்டி எக்யூப்மென்ட்ஸ், இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி தொழில்களை இந்தியா, தாய்லாந், இலங்கை, மலேசியா, பாங்காங்க் ஆகிய நாடுகளில் செய்து வருகிறோம். சொந்த மாவட்டத்தில் தொழில் தொடங்கி இங்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது ராமநாதபுரம் சாலை தெருவில் எஸ் இன்போடெக் நிறுவனத்தை தொடங்க உள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் எஸ் இன்போ டெக் தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனத்தின் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிறுவனத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்து பட்டம் பெற்ற 500 பேருக்கு முதல் கட்டமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர திட்ட மிட்டுள்ளோம். விரைவில் இயற்கை முறை யிலான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர திட்டமிட்டு அதற்கான முயற்சியிலும் இறங்கி உள்ளோம். நம் மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இங்கு தொழில் தொடங்கு கிறோம், என்றார். எஸ் இன்போடெக் நிறுவனத்தின் சேர்மன் சாகுல் ஹமீது , பி.வி.அறக்கட்டளை சேர்மன் தேசிய விருதாளர் டாக்டர் வி.அப்துல் ரசாக் ஆகியோர் உடனிருந்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here