ஆவடி, ஜன. 11 –

ஆவடி காவல் ஆணையரகத்தின் உத்தரவின் பேரில் கஞ்சா கடத்தல் மற்றும் பொதுயிடங்களில் பொது மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த ஐந்து பேர்கள் மீது குண்டர் சட்டம் 1982 சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் ஐவரும் அடைக்கப்பட்டனர்

மேலும் இச்சட்த்தின் கீழ் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ள 21 வயதான அன்சாரி என்பரின் மகனான அசரப்தீன் சோழவரம் காவல்நிலைய சரகத்திற் குட்பட்டப் பகுதிகளில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளார். மேலும் தற்போதும் அவர் மீது கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது.

அதுப்போன்று சென்னை கிண்டியில் உள்ள கருணாகரன் என்பவரின் 39 வயதுடைய மகன் அரவிந்த்குமார் என்கிற அரவிந்த், சென்னை அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரின் 34 வயதுடைய மகன் அழகரசன் என்ற அழகு, மேலும் சென்னை அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் சுந்தரம் என்பவரின் 29 வயதுடைய மகன் மணிகண்டன் என்கின்ற மணி, மற்றும் அதேப் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் 22 வயதுடைய மகன் செல்வபாலாஜி ஆகிய நான்கு பேர்களும் பொது இடங்களில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் இவர்கள் நான்கு பேர்கள் மீதும் அம்பத்தூர் காவல்நிலையத்தில் இவ்வழக்குத் தொடர்பான வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது.

எனவே குற்றங்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்திரவின் பேரில் அவர்கள் ஐந்து பேர்களையும் காவல்துறையினர் கைது செய்து தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இதுவரை ஆவடி காவல் ஆணையரக ஆணையரின் உத்திரவின் பேரில் 2023 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே இதுவரை பத்து நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here