சென்னை, சனவரி. 22 –

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததனால் 5 நூற்றாண்டு காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறிவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் எக்ஸ் தளத்தில் தனது பதிவில், 5 நூற்றாண்டுகளுக்கான காத்திருப்பு மற்றும் வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், மேலும் அதில் பிரபு ஸ்ரீராமரின் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு இன்று மறக்க முடியாத நாள். எனவும், இன்று, நமது குழந்தை ராமர் அவரது பிரம்மாண்டமான கோவிலில் காட்சியளிக்கும் போது, பிரபு ஸ்ரீராமரின் எண்ணற்ற பக்தர்களைப் போலவே, நானும் உணர்ச்சியில் மூழ்கியிருக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இவ் உணர்வை வார்த்தைகளால் தன்னால் விவரிக்க முடியாது என்று ஷா மேலும் கூறிவுள்ளார். நமது தலைமுறையினர் பலர் இந்தத் தருணத்திற்காகத் தியாகம் செய்துள்ளனர் என்றும், ஸ்ரீ ராமஜன்மபூமியில் மீண்டும் கோயில் கட்டுவதற்கான உறுதியையும் நம்பிக்கையையும் எந்த அச்சமோ, பயங்கரமோ அசைத்துவிட முடியாது என்றும் அவர் கூறிவுள்ளார்.

தொடர்ந்து அதில் இன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் லட்சியம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், அதற்காக அவருக்கு எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் இப் புனிதமான நாளில், பல நூற்றாண்டுகளாக இந்தப் போராட்டத்தையும் உறுதியையும் உயிர்ப்புடன் வைத்திருந்த, மற்றும் பல அவமானங்களையும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டும், ஆனால் மதத்தின் பாதையை விட்டு விலகாத, அனைத்துப் பெரிய மனிதர்களுக்கும் தனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறிவுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத், ஆயிரக்கணக்கான துறவிகள் மற்றும் எண்ணற்ற முகம் தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்களின் போராட்டம் இன்று இனிமையான, வெற்றிகரமான பலனை அளித்துள்ளது எனவும், இந்த பிரம்மாண்டமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயில் பல யுகங்களாக நித்திய மற்றும் அழியாத சனாதன கலாச்சாரத்தின் தனித்துவமான அடையாளமாக இருக்கும் என்று அமித்ஷா கூறிவுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here