வெள்ளவேடு, டிச. 22 –

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் “போதையில்லா தமிழ்நாடு” என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்  ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,  22.12.2022- ஆம் தேதி இன்று (ச&ஒ) B7.வெள்ளவேடு காவல் நிலையம் இளையராஜா, ஆய்வாளர் பார்ட்டி சகிதம் கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே ரோந்து அலுவல் செய்துக்கொண்டிருந்த போது,

இன்னோவா காரில் (TN.69.T.07001) இருவர். 1) முஸ்தா உசன் செரீப்(22), த/பெ.திலவர் உசன் செரீப், எண்.9.கே.எம்.நகர், குன்றத்தூர், 2)ஜெகன்(24), த/பெ.சீலன், ராமச்சந்திரா மண்டபம், பிளாக்,  குன்றத்தூர் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 446 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 446 கிலோ குட்கா மற்றும் குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய இன்னோவா கார் (TN.69.T.07001)  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கடத்தலில் ஈடுப்பட்ட இருவரையும் பூந்தமல்லி ஜே.எம் II நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், குட்கா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கை கைது செய்த B7.வெள்ளவேடு காவல் நிலையம் ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவல் ஆளினர்களை பாராட்டினார்கள். மேலும் ஆவடி காவல் ஆணையரக காவல் நிலைய எல்லைக்குள்  குட்கா விற்பனை மற்றும் குட்காவை வாகனங்களில் விற்பனைக்காக கடத்தி செல்வதை தடுக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டி குட்கா சோதனை தொடரும் ஆணையர் எச்சரித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here