Pic File copy

திருவண்ணாமலை மார்ச்.17-

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்று துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜூவ்காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தின் நிறைவு விழா நேற்று நடைபெற்றத. இவ்விழாவுக்கு வரலாற்று துறை தலைவர் ரா.ஸ்தனிஸ்லாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் சோளிங்கர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் வே.நெடுஞ்செழியன் சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லூரியின் முதுகலை வரலாற்று துறை மற்றும் தமிழ்த்துறைகளை சார்ந்த மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் வரலாற்று துறையில் பணிபுரியும் பேராசிரியர்கள் பிற துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முனைவர் நா.ஜெயசந்திரன் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here