கும்பகோணம், மார்ச். 29 –

நாடு தழுவிய அளவில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து தொடர் 48 மணி நேரம் பொது வேலை நிறுத்தத்தின் 2வது நாளான இன்று, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்திட வேண்டும், அதனை ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வர வேண்டும், நல வாரியங்களை சீர்குலைக்க கூடாது, மின்சாரத்திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருந்தி கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு, நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்,

தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு, கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here