கும்பகோணம், ஏப் . 04 –
கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் முருகேசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா ( 28 ) என்ற மனைவியும், இரண்டு வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர். மேலும் இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவர்களின் வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி அனுஷியா சம்பவ நாளான கடந்த மாதம் 27ஆம் தேதி மாலை பானி பூரிக்கு குருமா குழம்பு தயார் செய்த பாத்திரத்தை கீழே வைத்திருந்த நிலையில் அதில், குழந்தை ரிஷி தவறி விழுந்ததில் படுகாயமடைந்தது.
இதனை தொடர்ந்து அம்மாசத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்ட்டு பெற்று பின்னர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் உள்நோயாளியாக குழந்தை ரிஷி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை ரிஷி பரிதாபமாக இன்று உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து, திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 2 வயது குழந்தை ரிஷி உயிரிழந்த சம்பவம், கும்பகோணம் பகுதியில் பெரும் அதிர்ச்சியினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.